Home இலங்கைமாதகலில் நங்கூரம் திருடிய குற்றத்தில் கடற்படை சிப்பாய் கைது

மாதகலில் நங்கூரம் திருடிய குற்றத்தில் கடற்படை சிப்பாய் கைது

by admin

யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் மாதகல் – லுார்து மாதா கோவிலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் தரித்து விடப்படும் மீனவர்களின் படகுகளில் இருந்த நங்கூரங்கள் களவாடப்பட்டு, பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பாக இளவாலை காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் நங்கூரம் ஏற்றிய வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது. இதன்போது கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடற்படை சிப்பாய் ஒருவரே நங்கூரங்களை திருட உதவியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அதனை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடற்படை சிப்பாய் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More