Home உலகம்மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மரணம்!

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் கடலில் மூழ்கி மரணம்!

by admin

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (31.03.24) மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (01.04.24) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More