இதில் பொதுப் போக்குவரத்தில் அதிகளவு இடர்பாடுகள் ஏற்படுகின்றது. இதை குறித்த சேவை வழங்குநர்களே எமது நிலைமையை உணர்ந்து, உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து தீர்வுகளை தரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
குறிப்பாக சமூக சேவைகள் அதிகாரிகள் இதில் அதிக அக்கறை எடுத்து பொறிமுறையை உருவாக்கி சேவையை நாம் இலகுவாகவும் மனித நேயத்துடன் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் எமது வருமான ஈட்டல் மற்றும் பொருளாதாரத்துக்காக நாம் கருவி நிறுவனத்தின் ஊடாக பல உற்பத்திப் பொருட்களை செய்து சந்தைப்படுத்தி வருகின்றோம். அதற்காக எமது மாற்றுத்திறனாளிகள் பலர் வெளிக்கள பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அந்நிலையில் தற்போது எமது கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடிகளை மக்கள் விழிப்புடன் எதிர்கொண்டு எமது வாழ்வியலை வலுப்படுத்த வேண்டும் என மேலும் கேட்டு கொண்டனர்.

