மக்கள் நல்வாழ்வு மையத்தின் ஒழுங்கு அமைப்பில் புலம்பெயர் நாட்டில் வசித்து வரும் ஒரு குடும்பத்தின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மையத்தின் 120 வது வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் உதவி பங்கு தந்தை,மற்றும் பேசாலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,நிதி அனுசரணையாளர் அவுஸ்திரேலியா ஆகியோர் இணைந்து குறித்த வீட்வை வைபவ ரீதியாக திறந்து குறித்த பயனாளிகளிடம் கையளித்தனர்.இதன் போது மக்கள் நல்வாழ்வு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் மன்னார் இணைப்பாளர் குயின்ரஸ் ஷர்மிளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் பகுதியிலும் மன்னார் மாவட்டத்தில் 119வது குறித்த வீட்டு திட்டம் மன்னார் பிரதேச சபையின் செயலாளர் செல்வம் லுமினா பேரேரா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.


