Home இலங்கையாழில். வீதியோரமாக தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லை கற்கள் – நேரில் சென்று ஆராய்ந்த மாவட்ட செயலர் தலைமையிலான குழு!

யாழில். வீதியோரமாக தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லை கற்கள் – நேரில் சென்று ஆராய்ந்த மாவட்ட செயலர் தலைமையிலான குழு!

by admin

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று ஆராய்ந்தாா்

அதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் U.A.பந்துல ஜீவ ,மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன் , யாழ் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி, தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மான உத்தியோகத்தர் பா.கபிலன், கோட்டை பொறுப்பதிகாரி S.உசாந்தினி ஆகியோரும் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த எல்லைக்கற்கள் வீதிக்கு அருகாமை காணப்படுவதனால், பாரதூரமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாகவும் , நாட்டப்பட்ட 48  எல்லைக்கற்களையும்  அப்புறப்படுத்துவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய குறித்த அபிவிருத்தி அதிகார சபையின் எழுத்து மூல  அனுமதியினைப் பெற்று
எல்லைக்கற்களை நாட்டுவதற்கான
நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More