Home இலங்கைசீரற்ற காலநிலை – யாழில் 218 பேர் பாதிப்பு – ஒரு வீடு முற்றாக சேதம்

சீரற்ற காலநிலை – யாழில் 218 பேர் பாதிப்பு – ஒரு வீடு முற்றாக சேதம்

by admin

 

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலையால் ,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு வீடு முற்றாகவும் , 06 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளதாக  யாழ் . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 218 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒரு வீடு முழுமையாகவும் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் , மதகுகளை தடை செய்ய வேண்டாம் என கோருகிறோம். அத்துடன், எதிர்வரும் நாட்களில் பகல் வேளைகளில் மின்னல் தாக்கம் ஏற்பட கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் , பொதுமக்கள் அது தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More