195
வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அந்த நாடுகளுக்குப் பாதுகாப்பை வழங்காது என்றும், அவை அச்சுறுத்தலாகவே அமையும் என்றும் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் அமெரிக்கத் தளங்களை அனுமதிப்பதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கும் என நம்புவது அறியாமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தளங்கள் வளைகுடா நாடுகளைப் பாதுகாக்க அல்ல, மாறாக இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கே அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகின்றன என அவர் சாடியுள்ளார்.
அமெரிக்கத் தளங்கள் தற்காப்பு அரண்கள் அல்ல, அவை பிராந்திய அமைதிக்கு ஆபத்தானவை என்பதால், அவற்றின் தேவை குறித்து நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், ரஷ்யாவின் இந்த அதிரடி கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love

