Latest News
யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க...
வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர்...
அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என...
யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு:
திருவண்ணாமலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா!
மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமே ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்கிறேன்:
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7...
“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!”
பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை! தன் விடுதலைக்காக குரல் கொடுத்த...
உலகக் கிண்ணக் கால்பந்து திருவிழா மெக்சிகோ சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடக்கம்!
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைமுதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது
இலங்கைபிரதான செய்திகள்

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது

by admin March 24, 2026
written by admin March 24, 2026
213

 

முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்,

வடக்கில் கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம’ (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என ஆளுநர் தெரிவித்தார்,

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த  ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்,

பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது.
அத்துடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனத் தொிவித்தாா்.

அதன் போது முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்களை தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டினர்.

அதேபோல, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர்,மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

 
#UN #SriLanka #NorthernGovernor #LandDisputes #ForeignInvestment #GreenClimateFund
Spread the love
 
 
 Tweet     
ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளா்தடைமுதலீட்டாளர்கள்வடக்கு   அதிகாரத்துவ நடைமுறைகள்வடக்கு மாகாண ஆளுநர்
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
next post
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: கலக்கத்தில் இஸ்ரேல்? பின்னணியும் தற்போதைய நிலவரமும்!

Related News

யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க...

June 14, 2026

வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர்...

June 14, 2026

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என...

June 14, 2026

யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு:

June 14, 2026

திருவண்ணாமலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா!

June 13, 2026

மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமே ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்கிறேன்:

June 13, 2026

செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7...

June 13, 2026

“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்!”

June 13, 2026

பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை! தன் விடுதலைக்காக குரல் கொடுத்த...

June 13, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து திருவிழா மெக்சிகோ சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடக்கம்!

June 12, 2026

Recent Posts

  • யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி! June 14, 2026
  • வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு! June 14, 2026
  • அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; June 14, 2026
  • யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு: June 14, 2026
  • திருவண்ணாமலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா! June 13, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம்...

June 14, 2026

வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு...

June 14, 2026

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது...

June 14, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More