63
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமே தான் எப்போதும் ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடாளுமன்ற சபையில் உரையாற்றும்போது தனக்கு எவ்வித பதற்றமும் ஏற்பட்டதில்லை என்றும், ஆனால் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கு உரையாற்றுவது முற்றிலும் மாறுபட்டதொரு உணர்வைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். “அன்றும் இன்றும் என்னிடம் ஜனாதிபதி யார் என்று கேட்டால், நான் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை மட்டுமே கூறுவேன்” என அவர் தனது உரையில் பகிரங்கமாக முழங்கியுள்ளார்.
இலங்கையின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளின் பின்னணியில் இந்த செய்தி முற்றிலும் உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா, அண்மையக் காலமாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராகவும், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீவிர கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
இதே நிகழ்வில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்குப் புலம்பெயர் அமைப்புகளே நிதியுதவி வழங்கியதாக மற்றுமொரு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த உரை தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

