Home இலங்கையாழில். கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

யாழில். கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம்  காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.  புன்னாலைகட்டுவான் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவர் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக சுன்னாகம்  காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் மூன்று வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை சுன்னாகம்  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து  காவல்துறையினா்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#Jaffna #Crime  #Violent Gang  #Attack Plan #PoliceArrest #Chunnakam Police #SharpWeapons #Swords

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More