134
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று, ஏப்ரல் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். தற்போது குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, அது தொடர்பான மேலதிக வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே அவர் அங்கு அங்கு சென்றுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில நிதி கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான முறைப்பாடுகள் தொடர்பில் அவரிடம் நீண்ட நேர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆணைக்குழுவின் அழைப்பினை ஏற்று அங்கு சென்ற அவர், விசாரணை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு வழங்கி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Spread the love

