Home இலங்கைஅமெரிக்காவில் இலங்கை பௌத்த பிக்கு கைது — வணிக ரீதியான பாலியல் சேவை நாடியதாக குற்றச்சாட்டு!

அமெரிக்காவில் இலங்கை பௌத்த பிக்கு கைது — வணிக ரீதியான பாலியல் சேவை நாடியதாக குற்றச்சாட்டு!

by admin
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) 2024 டிசம்பர் முதல் பௌத்த சாப்ளின் (Buddhist Chaplain) பதவியில் பணியாற்றிய இலங்கை பிக்கு மகாயாயே வினீத தேரர் (Rev. Mahayaye Vineetha Thero), 32 வயது, போஸ்டன் நகர காவல்துறையின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் ஜூன் 13 அன்று போஸ்டனின் பே வில்லேஜ் பகுதியில் உள்ள ரெவேர் கொட்டலில் (Revere Hotel) நடத்தப்பட்ட சோதனையின்போது நிகழ்ந்தது. இது “ஒபரேஷன் ரெட் கார்ட்” (Operation Red Card) என்ற பெயரிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் — FIFA உலகக் கோப்பை போட்டிகள் போஸ்டன் பகுதியில் நடைபெறும் காலகட்டத்தில் பாலியல் கடத்தல் வலைப்பின்னல்களை முறியடிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடத்தைக்கு மாறாக, தேரர் வாணிபரீதியான பாலியல் சேவைகளை வழங்குவதாக போர்வேடமிட்டு இணையத்தில் விளம்பரம் செய்த போலீஸ் அதிகாரிகளின் (undercover officers) விளம்பரத்திற்கு பதிலளித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டு, போஸ்டன் மத்திய நகர நீதிமன்றில் கட்டண அடிப்படையில் பாலியல் சேவை கோரியதற்காக (soliciting sex for a fee) குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
டஃட்ஸ் பல்கலைக்கழகம் திங்கட்கிழமை அவரது ராஜினாமாவைப் பெற்றதாக உறுதிப்படுத்தியது. பல்கலைக்கழக வலைத்தளத்திலும் அவரது பெயர் அகற்றப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர் இதுவரை பொதுவில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்தச் சம்பவம் இலங்கை, அமெரிக்கா மற்றும் சர்வதேச பௌத்த சமூகங்களில் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More