60
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு (CCIB) சமூகமளித்துள்ளார்.
குறித்த பணியகத்தினால் நீண்டநாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிதி மற்றும் சொத்துக் குவிப்பு தொடர்பான விசேட விசாரணை ஒன்றிற்கு அமைவாகவே, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டு முன்னிலையாகியுள்ளார்.
இவரிடம் தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்கள் விரைவில்…
Spread the love

