Home இலங்கைசிவனொளிபாதமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு சிங்ஹ லே அமைப்பு எடுத்த முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்

சிவனொளிபாதமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு சிங்ஹ லே அமைப்பு எடுத்த முயற்சி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்

by admin


சிவனொளிபாதமலையில்  புத்தர் சிலை  வைப்பதற்கு  சிங்ஹ லே அமைப்பு எடுத்த முயற்சி  காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன்காரணமாக நேற்றையதினம் அப்பகுதியில் சற்று பதட்டமான ஒரு சூழ்நிலை காணப்பட்டதாகவும்  சினொளிபாத மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்ஹ லே அமைப்பினரால் சிவனொளிபாதமலையின் இதிகட்டுமானப் பகுதி வரை புத்தர் சிலை கொண்டு செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரின் தலையீட்டினால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபூமியானது, சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை வலியுறுத்தும் வகையில், அவர்கள் புத்தர் சிலையை வைக்க முயன்றதாகவும்  இது, இனவாதப் பிரச்சினைக்கு வழிவகுக்கும்  என்பதனால் புத்தர் சிலையை வைக்க அனுமதிக்கப்போவதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More