Home இலங்கைலொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை

லொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டுக் கட்டடத் தொகுதி நிர்மானப் பணிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ நிதியத்தின் பணிப்பாளராக தாம் கடமையாற்றியதாகவும் அதுகுறித்து வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை எனவும் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடத் தொகுதி சில தனிப்பட்ட நபர்களின் உதவு தொகைகளின் அடிப்படையில் நிர்மணிpக்கப்பட்டது எனவும் மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோர் மீது இவ்வாறு சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More