Home இலங்கைஎனக்கு பதவி வழங்குவதனை சிலர் எதிர்க்கின்றார்கள் – சரத் பொன்சேகா

எனக்கு பதவி வழங்குவதனை சிலர் எதிர்க்கின்றார்கள் – சரத் பொன்சேகா

by admin


ஐக்கிய தேசியக் கட்சியில் தமக்கு பதவி வழங்கப்படுவதனை சிலர் எதிர்த்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்குவதாக சில காலங்களுக்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ள அவர் பதவி நிலை இருந்தாலும் இ;ல்லாவிட்டாலும் தாம் யார் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரும் அறிந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் ஒரு சிலர் மட்டும் தமக்கு பதவி வழங்குவதனை எதிர்த்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More