Home இலங்கைமுறையற்ற அரசியல் தூண்டுதல் செயற்பாடுகளுக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறைகூற மாட்டேன் – ஜனாதிபதி

முறையற்ற அரசியல் தூண்டுதல் செயற்பாடுகளுக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறைகூற மாட்டேன் – ஜனாதிபதி

by admin

அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிவிக்கும் சிலர் தற்போது பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக தான் எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் தான்  குறை கூறப் போவதில்லை எனவும்  அவர் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற  நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   இவ்வாறு தெரிவித்தார்.

வருடத்திற்கு சுமார் இரண்டரை இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுள் சுமார் தொண்னூராயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை பெறுவதற்கான தகைமையை பெற்றுக்கொண்டபோதிலும் இருபத்தையாயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனவே ஏனைய மாணவர்களின் உயர் கல்விக் கனவினை நிறைவேற்றுவதற்காக அரச பல்கலைக்கழகங்களைப் போன்று உயர் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களும் நாட்டில் உருவாகவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More