Home விளையாட்டுமகளிர் உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியொன்றில் நியூசிலாந்து வெற்றி

மகளிர் உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியொன்றில் நியூசிலாந்து வெற்றி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மகளிர் உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியொன்றில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டலில் இந்தப் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் சாமரி ஜயங்கனி 53 ஓட்டங்களையும், சமரி பொல்கம்பொல 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து மகளிர் அணியின் சார்பில் ஹொல்லி ஹடில்ஸ்டோன் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாலந்து அணி 37.4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியுள்ளது. சூசி பேட்ஸ் 106 ஒட்டங்களையும், எமி சட்டர்வெதி 78 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை நேற்றையதினம்  பிரித்தானியாவின் டெர்பியில் நடைபெற்ற மற்றையதொரு போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை  35ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More