Home இலங்கைதற்போதைய ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் – சரத் வீரசேகர

தற்போதைய ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் – சரத் வீரசேகர

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் என தேசிய அமைப்புக்களின் ஒன்றிய உறுப்பினர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிப்போர் என்ற அடிப்படையில் தேசத்தின் முக்கிய சொத்துக்களை விற்பனை செய்வோரை தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தையும் வழங்குவதன் மூலம் உலகின் பலம்பொருந்திய நாடுகளுக்கு மத்தியில் இலங்கை பலவீனமான நாடாக மாற்றமடைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More