Home இலங்கை80 இந்திய மீனவர்கள் விடுதலை

80 இந்திய மீனவர்கள் விடுதலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 76 இந்திய மீனவர்களும், படகு விபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களும் இவ்வாறு விடுதலை  செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட முறைகளில் இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கைக் கடற்பரப்பில்  அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் இந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More