Home இலங்கைஜனாதிபதியால் கிளிநொச்சியில் பொருளாதார மத்தியநிலையம் திறந்துவைக்கப்பட உள்ளது

ஜனாதிபதியால் கிளிநொச்சியில் பொருளாதார மத்தியநிலையம் திறந்துவைக்கப்பட உள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிராமிய பொருளாதார அலவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி    திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்விற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கிராமிய பொருளாதார அலுவல்கள்   அமைச்சர்  ஹரிசனின் பங்கபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்   இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்   சுந்தரம்அருமைநாயகம். மேலதிக அரசாங்க அதிபர்  சத்தியசீலன், முப்படைகள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலினைத் தொடர்ந்து   அமைச்சர் விசேட பொருளாதார மத்தியநிலையத்தினை பார்வையிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More