Home உலகம்ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் சரிந்து செல்கிறது..

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் சரிந்து செல்கிறது..

by admin

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 1899-ம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே சென்றுள்ளது.

சுறுசுறுப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களில் 27.2 சதவீதமான மக்கள் 65 வயதை கடந்த முதியவர்களாக உள்ள அதேவேளை 14 வயதுக்கு குறைவானவர்கள் 12.7 சதவீதமாக உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பிறப்பு விகிதம் 4 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 13 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More