Home இலங்கையாழில் நடிகர் ஆர்யாவின் பெண்தேடும் நிகழ்வும் வெளிக் கிளம்பும் எதிர்புகளும்…

யாழில் நடிகர் ஆர்யாவின் பெண்தேடும் நிகழ்வும் வெளிக் கிளம்பும் எதிர்புகளும்…

by admin

இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தென்னிந்திய நடிகர் ஆர்யா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ். பொது நூலகம் அனலைதீவு உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

தனியார் தொலைக்காட்சி ஒன்று ஆர்யாவுக்காக பெண் தேடி எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வர நிகழ்ச்சியை நடாத்துகிறது. இதன் இறுதிப் போட்டியாளராக இலங்கையின் யாழ் அனலைதீவை சேர்ந்த சுஷானா என்ற பெண்ணின் வீட்டிற்றே இவர் வருகை தந்துள்ளார்.  இதேவேளை ஆர்யாவின் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டன. அத்துடன் குறித்த நிகழ்ச்சிக்காக யாழ் நூலகத்தில் படப்பிடிப்பு நடாத்திய வேளை இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சில இளைஞர்கள் ஆர்யாவுடன் இணைந்து செல்பி எடுக்க முண்டியடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆர்யாவின் குறித்த நிகழ்ச்சி, யாழ் பயணம், படப்பிடிப்பு உள்ளிட்ட விடயங்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More