இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடை யிலான இராஜதந்திரஉறவு விரிசலடைந்துள் ளது. இந்த உறவு முன்புபோல் இல்லை. இதற்குக் காரணம், சீன அரசுடனான நட்பே, என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு இந் தியா சென்றுள்ள அவரிடம் செய்தியாளர்கள் உரையாடினர். அதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,
ஈழ ஏதிலிகள் இந்தியா உட்படப் பன்னாடுகளில் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் ஈழத்துக்கு அழைத்துவர பேச்சுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான அதிகார வரம்பு குறைவாகவுள்ளது. அதனால் இலங்கையில் தமிர்களுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. வடக்கில் இந்த நிலை நீடிக்கிறது. எனவும்அவர் தெரிவித்துள்ளார்.