Home சினிமாபுதிய அவதாரம் எடுக்கும் மூத்த இயக்குனர் மனோபாலா

புதிய அவதாரம் எடுக்கும் மூத்த இயக்குனர் மனோபாலா

by admin


தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் தற்போதைய பிரபலமான நகைச்சுவை நடிகருமான மனோபாலா, புதிய அவதாரம் ஒன்று எடுக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது. மனோபாலா ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து வருகின்றார். இதுபற்றி கேட்டபோது ‘இதற்கு முன்பு சினிமாவில் வாய்ப்பு குறைந்தால் சீரியல்’ என்ற நிலை இருந்தது. தற்போது அவ்வாறு இல்லை என்றும் கூறுகிறார் மனோபாலா.

பழைய வி‌ஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால் சினிமாக்காரர்கள் முன்னேற முடியாது எனக் கூறிய அவர் பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்போது ‘வெப் சீரிஸ்’ தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நானும் ஒரு ‘வெப் சீரிஸ்’ தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’, கார்த்தி நடிக்கும் `கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களில் நடித்துள்ளதாகவும் அடுத்து சூர்யா படத்தில் நடிக்கிறேன் என்றும் தான் இயக்குனர்களுக்கு பிடித்த நடிகன் என்றும் மனோபாலா குறிப்பிடுகிறார்.

அதனால்தான் இத்தனை வாய்ப்புகள் வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து சேரன் இயக்க இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். தம்பி ராமையா மகன், எம்.எஸ்.பாஸ்கர்னு பெரிய பட்டாளமே அதில் நடிக்கிறோம்’ என்று கூறினார் மனோபாலா.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More