Home இலங்கைMY3 – MR இடையிலான சந்திப்பையும், இடைக்கால அரச உருவாக்கத்தையும் மறுத்தார் S.B

MY3 – MR இடையிலான சந்திப்பையும், இடைக்கால அரச உருவாக்கத்தையும் மறுத்தார் S.B

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையில் தன்னுடைய வீட்டில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அறிக்கை ஒன்றின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயக்கா  தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற இரவு நேர விருந்து ஒன்றிற்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டதாக தெரிவித்த அவர், இதன்போது விஷேடமான அரசியல் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ திஸாநாயக்கவின் வீட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More