விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்ப நிகழ்வு 8 நகரங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.


இன்று ஆரம்பமாகின்ற ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆரம்ப நிகழ்வு 8 நகரங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது.  தொடக்க விழாவை அனைத்து அணிகளின் உள்ளூர் ரசிகர்களும் கண்டுகளிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐ.பி.எல்.  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இன்றையதினம் ஐதராபாத் நகரில்  ஆரம்பநிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று இடம்பெறுகின்ற  இந்த நிகழ்வில் 8 அணிகளின்   தலைவர்களின்  உறுதிமொழி ஏற்பு இடம் பெறவுள்ளதுடன்  இந்திய கிரிக்கெட் வீரர்கள்  சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக், லட்சுமண் ஆகியோர்  கௌரவிக்கப்படவுள்ளனர்.
ஆரம்பநிகழ்வானது  புனே, ராஜ்கோட், இந்தூர் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களிலும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply