விளையாட்டு

ஐ.பி.எல் போட்டித் தொடரில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் முன்னணி


2017ம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளி அடிப்படையில் முன்னிலையில் வகிக்கின்றது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள நைட் ரைடர்ஸ் அணி, 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் உள்ளது.  இரண்டாம் இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வகிக்கின்றது.

மும்பை இந்தியன்ஸும் 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும், சராசரி புள்ளி அடிப்படையில் கொல்கட்டா முன்னணி வகிக்கின்றது.  மூன்றாம் இடத்தில் 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளது.  4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் டெல்லி டெயார் டெவில்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.