விளையாட்டு

இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

இருபதுக்கு இருபது  கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ஓட்டங்களை  கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள்  அணியின் வீரர்  கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். கெய்ல், உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொழில்முறை கிரிக்கெட்டான இருபதுக்கு இருபது  லீக்கில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டித் தொடரில் இன்று குஜராத் அணிக்கெதிராக களம் இறங்கிய  கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியின் போது  3 ஓட்டங்களைப் பெற்றவேளையிலேயே  10 ஆயிரம் ஓட்டங்களைப்  பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து விளையாடிய கெய்ல் 38 பந்தில் 77 ஓட்டங்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply