விளையாட்டு

ஊக்க மருந்து பயன்பாடு குறித்த தகவல்களை வெளியிட்ட ரஸ்ய வீரருக்கு தடை


ஊக்க மருந்து பயன்பாடு குறித்த தகவல்களை வெளியிட்ட ரஸ்ய விளையாட்டு வீரருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஸ்ய மெய்வல்லுனர் வீரர் அலெக்ஸாண்டர் கூற் (Alexander Khyutte  )க்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்றுவிப்பாளர் ஒருவர் ஊக்க மருந்து வழங்கியமை குறித்த தகவல்களை வெளியிட்ட ரஸ்ய மெய்வல்லுன வீரர் அலெக்ஸாண்டர் கூற் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டர் கூற்றுக்கு எதிராக ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காமை, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்த முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஊக்க மருந்து குற்றச் செயலில் ஈடுபட்டமைக்காக நான்கு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply