குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விம்பிள்டன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை லவுரா ரொப்சன்(Laura Robson ) முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். பிரேஸிலின் பேட்றிஸ் கட்டட் மயா ( Beatriz Haddad Maia ) விடம் லவுரா தோல்வியடைந்துள்ளார்.
6-4 மற்றும் 6-2 என்ற நேர் செற்களில் லவுராவை,Beatriz Haddad Maia யை தோற்கடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டில் லவுரா இறுதி 16 பேர் வரையில் தெரிவாகியிருந்தார். நேற்று இடம்பெற்ற முதல்சுற்றில் போட்டியில் லவுரா சிறந்த முறையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீரர் வாவ்ரின்கா தோல்வியடைந்தார். ஏனைய வீரர்களான ரபால் நாடால் , அண்டி மரே ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Spread the love
Add Comment