விளையாட்டு

பணத்தை அடிப்படையாகக் கொண்டு கழகம் மாறவில்லை – நெய்மர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பணத்தை அடிப்படையாகக் கொண்டு தாம் கழகம் விட்டு கழகம் மாறவில்லை என உலகின் முதனிலை கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். பிரேஸில் அணியின் நட்சத்திர வீரராக நெய்மர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 வயதான நெய்மரை பரிமாற்ற அடிப்படையில் 222 மில்லியன் யூரோக்களுக்கு பார்சிலோனா கழகத்திமடமிருந்து, பிரான்ஸ் கால்பந்தாட்டக்கழகமான சென்ற் ஜெர்மைன் ( St-Germain ) ஒப்பந்தம் செய்து கொண்டது. நெய்மர் இந்த சனிக்கிழமை புதிய கழகம் சார்பில் முதல் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்’தநிலையில் பணத்திற்காக கழகம் விட்டு கழகம் மாறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், பணத்திற்காக சென்றிருந்தால் தாம் எங்கோ சென்றிருக்க முடியும் எனவும் நெய்மர் தெரிவித்துள்ளார்.

தமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அறிந்திராத மக்கள் தம்மை பிழையாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply