30
அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் உள்நாட்டு மக்களுக்கு ஒன்றையும் சர்வதேச சமூகத்திற்கு மற்றுமொன்றையும் தெரிவித்து வருவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானம் தொடர்பிலான விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஒருவிதமான உறுதி மொழிகளை வழங்கும் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வேறும் உறுதிமொழிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love