144
எசல வீரக்கோன் வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக பதவி ஏற்க உள்ளார்.
இதுவரை காலமும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த சித்ராங்கனி வகீஸ்வரா பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சிரேஸ்ட சிவில் அதிகாரிகளில் ஒருவரான பிரட்மன் வீரக்கோனின் புதல்வரே எசல வீரக்கோன் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு றோயல் கல்லூரி, களனி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பிசினஸ் கல்லூரி ஆகியவற்றில் எசல கல்வி கற்றுள்ளார்.
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ராஜதந்திர சேவைகளில் எசல ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love