எனினும்; அவர்கள் மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக இவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு பப்புவா நியூ கினி உச்ச நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்து இருந்தது.
அகதிகளை அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதம் எனக் கூறிய நீதிமன்றம், அந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதனால் அகதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு ரூ.6½ லட்சம் உதவி தொகை வழங்கி அவர்களை அனுப்ப இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்தது. ஊச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தற்போது ரூ.13 லட்சம் வழங்கி அவர்களை அனுப்ப முயற்சி மேற் கொண்டுள்ளது. அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதுடன், அதற்காக அகதிகள் நடவடிக்கை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தலா ரூ.13 லட்சம் உதவித் தொகையுடன் அகதிகளை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சி:
113
உள் நாட்டு போர் நடை பெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா சென்ற பலர் தங்களுக்கு தஞ்சம் வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Spread the love