குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
கூட்டு எதிர்க்கட்சியினர் ஆறு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளை கோருவதாக அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகள், இரண்டு ராஜாங்க அமைச்சுப் பதவிகள் மற்றும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளை கூட்டு எதிர்க்கட்சியினர் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இது குறித்து பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதாக குற்றம் சுமத்தும் கூட்டு எதிர்க்கட்சியினர், இரகசியமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேரம் பேசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் யார் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயக அடிப்படையில் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.