ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தீவிரவாதிகள், வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தும் உத்திகளை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் அல்லது சிறு குழுக்களாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்காக ஈரானுக்கு 400 மில்லியன் டொலர்கள் கப்பம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளினால் அமெரிக்காவையோ அல்லது நேட்டோபடையினரையோ தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
156
Spread the love