அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவிலிருந்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் பழிவாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், எதிர்த்தரப்பினை நெருக்கடிக்குள் ஆழத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சிக்கு அவர் வழங்கி வந்த ஆதரவே இவ்வாறு கட்சி உறுப்புரிமை ரத்துசெய்யப்பட காரணம் என மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
சனத் நிசாந்தவும் அவரது குடும்பத்தினரும் கட்சிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்கைள செய்தவர்கள் எனவும், உயிர் தியாகம் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
123
Spread the love