முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர், பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.
2014ம் ஆண்டு சதோச நிறுவனத்துக்கு அமைச்சரவை அனுமதியின்றி ஒரு தொகை அரிசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆணைக்குழுவினரால் அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை திறந்து வைத்த அன்று இடம்பெற்ற சம்பவம் குறித்து வாக்குமூலம் அளிக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்த, இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.