40
மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டுமென துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றமும் பொதுமக்களும் அனுமதி வழங்கினால் மரண தண்டனையை மீள அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி தலைநகர் இஸ்தான்புலில் நடைபெற்ற பாரிய மக்கள் பேரணியின் போது தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றதனைத் தொடர்ந்து பாரிய பொதுக் கூட்டமொன்றை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ சதிப் புரட்சி கலகத்தின் போது 270 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
Spread the love