117
பிறிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் நாடு திரும்பியுள்ளார்.
மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்டார் எனவும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Spread the love