வடக்கிற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காணிகளை வழங்குவது தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் வறிய மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதனை எதிர்க்கவில்லை எனவும், செல்வந்தர்கள் அரசியல்வாதிகளுக்கு காணிகள் வழங்கப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதம டி.எஸ் சேனாநாயக்க மஹாவலி காணிகளை வழங்கியதாகவும் அதன் பின்னர் எவரும் காணிகளை வழங்கவில்லை எனவும் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் சீருடை அணிந்து ஆயுதம் ஏந்திய படையினரை வடக்கில் அதிகளவில் நிலைநிறுத்த வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சீருடை மற்றும் அயுதங்கள் இல்லாத காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.