மக்களுக்கு சிக்கல் ஏற்படாத வகையில் கடன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கம் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெகுவிரைவில் வங்காளவிரிகுடாவை உலகின் செல்வாக்கான பிராந்தியமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தாது கடன் பிரச்சினைக்கு காத்திரமான முறையில் தீர்வு எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்