இந்தியா

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை – டொக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை எனவும்  ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் டொக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கைகள் இன்று வெளியிடப்பட்டன. அறிக்கைகளை வெளியிட்ட பின் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம்  கருத்து  ராதாகிருஷ்ணன்  மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில்தான் எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர் எனவும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும்  தேவையற்ற வதந்திகளை அழிப்பதற்காக தெளிவான அறிக்கை அளித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதையும் மறைக்கவில்லை எனவும்  ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply