மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் என பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்கு நீதிபதிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். முதல் தடவையாக டெப், பிரதம நீதியரசர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்வில் கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதவான்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.