இலங்கை

பாராளுமன்றில் இன்றைய தினமும் அமளி


பாராளுமன்றில் இன்றைய தினமும் அமளி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றில் ஏற்பட்ட குழப்ப நிலைமையைத் தொடர்ந்து அமர்வுகளை எதிர்வரும் 21ம் திகதி வரையில் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பதற்ற நிலையைத் தொடர்ந்து இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் உரையாற்றுவதற்கு சபாநயாகர் அனுமதித்ததனை அரசாங்கத் தரப்பினர் எதிர்த்துள்ளதனால் இரு தரப்பிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply