உள்நாட்டு போர் இடம்பெற்றுவருகின்ற கொங்கோவில் பல தீவிரவாத குழுக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் கொங்கோவின் மத்திய பகுதியில் உள்ள கசாய் மாகாணத்தில் 10 பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட 40 காவல்துறையினரின் உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காவல்துறையினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை வாகனத்துடன் கடத்திச் சென்று தீவிரவாதிகள் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் காம்வினா சாபு அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டி என்பவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதனை தொடர்ந்து குறித்த அமைப்பினர் இவ்வாறு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் கசாய் மாகாணத்தில் இதுவரை 400 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.