இலங்கை

ஏப்ரலில் கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் வழமைக்குத் திரும்பும்

திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுநாயக்க சர்வதேச சர்வதேச விமானநிலையத்தின் சர்வதேச விமானங்களுக்கான ஓடுபாதை ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் திறக்கப்படுமென தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினத்திலிருநது விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதுடன் ஓடுபாதைகளை திருத்தியமைக்கும் பணி ஏப்ரல் ஐந்தாம் திகதியுடன் பூர்த்திசெய்யப்படுமென்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

புனரமைப்பு பணிகள் யாவும் எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவடையுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 3350 மீற்றர் நீளத்தையும் 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட குறித்த ஓடுபாதை சர்வதேச விமான, சிவில் விமான அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய புனரமைக்கப்பட்டுள்ளது. இப் பணிகளுக்காக 7 . 2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply