புலம்பெயர் நாடுகளிலிருந்து வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளிலிருந்து வருபவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் கப்பமாகக் கோரப்படுகிறது எனவும் இது தொடர்பில் முறைபாடுகளை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது குறித்த தகவல்களை வெளியிடுவது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.