மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கொடுப்பவினை 4000 ரூபாவால் அதிகரித்து அடுத்த மாதம் முதல் 10.000 ரூபா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கபடவில்லை என பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டதாகவும எனினும் இந்த விடயம் தொடர்பில் பிரதமருடன் தமிழ் முற்போக்கு கூட்டனி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இந்த தீர்மானம் எடுக்கபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சர்களான மனோ கணேசன்¸ பழனி திகாம்பரம் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.